திமுக நடுநிலை வகிக்கும்
சென்னை:
தமிக சட்டசபையில் பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று கொண்டு வரப்படும் தீர்மானத்தால் இலங்கை அமைதிமுயற்சிகள் பாதிக்கப்படலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி இத் தீர்மானத்தைஆதரிக்க மாட்டார் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் புலிகள் ஆதரவு என்ற நிலையை எடுக்கவும் திமுக தயாராக இல்லை. இதனால் பாண்டிச்சேரியில்செய்ததைப் போல இன்றைய தீர்மானத்தை ஆதரிக்கவும் செய்யாமல், எதிர்க்கவும் செய்யாமல் திமுக நடுநிலைவகிக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து முடிவு செய்ய இன்று காலை திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிதலைமையில் நடந்தது.
சந்திரசேகர் பிரதமராக திமுக ஆட்சியைக் கலைத்தார். அப்போது அவர் கூறிய காரணம், புலிகள் தொடர்பாகமாநில அரசுக்கு மத்திய அரசு கொடுக்கும் விவரங்கள் புலிகளுக்குப் போய் சேருகின்றன என்பது தான்.
இதை கருணாநிதி வன்மையாக மறுத்துவந்தார். இப்போது இந்தத் தீர்மானத்தை எதிர்த்தால் மீண்டும் புலிஆதரவாளர்கள் முத்திரை விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது திமுக.
இதனால் நடுநிலை வகிக்கும் என்று தெரிகிறது. அல்லது தீர்மானம் கொண்டுவரப்படும்போது வேறு விவகாரத்தைப்பற்றி பேசிவிட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications