ஜெ.க்கு எதிரான திமுகவின் உரிமை மீறல் பிரச்சனை மீண்டும் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தவறான தகவலைக் கூறியதாகசட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனைகோரினர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.368.85 கோடி இழப்பு ஏற்பட்டது என்று கடந்த மார்ச் 15ம் தேதிசட்டசபையில் ஜெயலலிதா கூறினார். பின்னர் கடந்த 10ம் தேதி இந்த இழப்பு ரூ.533 கோடி என்று திருத்திஅறிவிக்கப்பட்டது.

இப்படி முன்னுக்குப் பின் முரணாகக் கூறி சபைக்குத் தவறான தகவல்களை அளித்துக் கொண்டிருப்பதால்,ஜெயலலிதாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வர வேண்டும் என்று சபாநாயகர்காளிமுத்துவுக்கு திமுக எம்.எல்.ஏக்களான பொன்முடி, புகழேந்தி மற்றும் பிச்சாண்டி ஆகியோர் நோட்டீஸ்அனுப்பியிருந்தனர்.

ஆனால் காளிமுத்து இந்த உரிமை மீறல் பிரச்சனையைத் தள்ளுபடி செய்து விட்டார்.

சட்டசபையில் பழைய சம்பவங்களுக்கெல்லாம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவர முடியாது என்று கூறியகாளிமுத்து, ஜெயலலிதா கூறியதிலும் எந்தவிதமான உரிமை மீறலும் எழுந்து விடவில்லை என்றும் தெரிவித்தார்.

கடந்த வாரம்தான் காவிரி விவகாரத்தில் தவறான தகவல் கொடுத்தார் ஜெயலலிதா என்று கூறி, அவருக்கு எதிராகதிமுகவினர் உரிமை மீறல் பிரச்சனையை எழுப்பினார்கள்.

ஆனால் தான் வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டதாக ஜெயலலிதா மறுநாளே அதற்காக வருத்தம் தெரிவித்தார்என்று கூறிய காளிமுத்து, ""தவறு செய்வது மனித இயல்பு. ஜெயலலிதாவும் ஒரு மனுஷிதானே"" என்றுகூறியிருந்தது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+