500 கோடிக்கு முன் 57 கோடி எங்கே? - ஜெ.க்கு கருணாநிதி பதில்
சென்னை:
தனக்கு எதிராக வழக்குகளைப் போடுவதற்காகவே முந்தைய திமுக அரசு ரூ.57 கோடி மக்கள் வரிப் பணத்தைவீணாக்கியுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதிஇன்று (செவ்வாய்க்கிழமை) விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதாவும் முன்னாள் அதிமுக அமைச்சர்களும் சுரண்டிய ரூ.500 கோடியை மீட்பதற்காகத்தான் தனிநீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வளவு பணத்தையும் மீட்பதற்காக நாங்கள் ரூ.57 கோடியைச் செலவழித்ததில் எந்தத் தவறும் இருப்பதாகஎனக்குத் தெரியவில்லை.
போதுமான அளவுக்கு ஆதாரங்கள் இருப்பதைத் தெரிந்து கொண்ட பிறகே இந்த வழக்குகளையும் தனி நீதிமன்றம்ஏற்றுக் கொண்டது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது கல்வி அமைச்சராக இருந்த பொன்னுசாமி மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என்பதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்துள்ளதை நான் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த வழக்குகளைப் பொய்யான வழக்குகள் என்று கூற யாராலும்முடியாது என்றார் கருணாநிதி.
ஆண்டிப்பட்டியில் நடந்த அரசு விழாவில் போய் ஜெயலலிதா இவ்வாறு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளாரே என்றுநிருபர்கள் கேட்டதற்கு, அரசு விழாவை அதிமுக விழாவாகக் கொண்டாடுவதற்காகத்தான் சென்னையிலிருந்துசிறப்பு விமானத்தில் அங்கு அவர் சென்றதாக கருணாநிதி பதிலளித்தார்.
"மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்ததாக ஜெயலலிதாகூறியுள்ளாரே?" என்று சில நிருபர்கள் கேட்டனர்.
"ஆமாம். இந்தச் சந்திப்பைப் பற்றி மாறன்தான் ஜெயலலிதாவிடம் ரகசியமாகக் கூறியிருந்தார். அதைத்தான்ஜெயலலிதா அப்படியே திரும்பவும் கூறியுள்ளார்" என்று நக்கலாகக் கூறினார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications