புலிகளை ஜெ. ஆதரித்தது ஏன்? கருணாநிதி கேள்வி
சென்னை:
தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு பிரபாகரனுக்கு எதிராகமுதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி இருப்பது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான் என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது பேசிய எதிர்க் கட்சித தலைவரும் திமுக முக்கியதலைவர்களில் ஒருவருமான அன்பழகன், இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம். நடுநிலை வகிக்கிறோம்என்றார்.
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏதோ விடுதலைப் புலிகளை ஜெயலலிதா ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவது மாதிரி ஒரு மாயையைஉருவாக்கப் பார்க்கிறார். 1990ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டபோதுஅது குறித்து கருத்துத் தெரிவித்த ஜெயலலிதா, புலிகள் தான் இலங்கை தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.புலிகளை ஒழித்துவிட்டால் தமிழ் இனமே அழிந்துவிடும் என்றார்.
ராஜிவ் படுகொலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் கூட பங்களாதேஷில் இந்திரா காந்தி எடுத்த ராணுவ நடவடிக்கைமாதிரி இலங்கையிலும் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி எந்தஉதவியும் செய்யவில்லை என்றார்.
மேலும் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது அதற்கு திமுக தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்துஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. புலிகளுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று எங்கள் ஆட்சியைக்கலைத்த அப்போதைய பிரதமர் சந்திரசேகரே பின்னால் கூறினார்.
அதையெல்லாம் மறைத்துவிட்டு இப்போது தீர்மானம் நிறைவேற்றுவதாக நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா.
இந்த குருட்டுத்தனமான செயல்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட ஜெயலலிதா நினைத்தால் அதைதிமுக தொண்டர்கள் முறியடித்துக் காட்டுவார்கள்.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந் நிலையில் சட்டசபையில் நடுநிலை வகித்துவிட்டு வெளியே வந்த அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில்,ராஜிவ் கொலையை யாரும் ஆதரிக்கவில்லை. அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது தான்.
ஆனால், இப்போது இலங்கையில் அமைதி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நலையில் அதைக் கெடுக்கும்வகையில் இந்தத் தீர்மானம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications