திரும்பின விலங்குகள்.. திறக்கப்பட்டது முதுமலை
முதுமலை:
கடும் வறட்சி காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை விலங்குகள் சரணாலயம் மீண்டும் இன்று முதல் திறக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் கடும் வறட்சி நிலவியது. இதனால் மிருகங்கள் காட்டுப் பகுதியைவிட்டு வெளியேறஆரம்பித்தன. இதனால் அங்கு மக்கள் நடமாட்டம் இருப்பது ஆபத்தை உருவாக்கும் என்பதால் சரணாலயம் கடந்த மார்ச் மாதம்மூடப்பட்டது.
இந் நிலையில் காட்டுக்குள் சில பகுதிகளில் நல்ல மழை பெய்திருப்பதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் காட்டிலிருந்துவெளியேறிய பல விலங்குகள் மீண்டும் காட்டுக்குள் திரும்பத் தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து சரணாலயத்தை மீண்டும்திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதுமலை சரணாலயத்திற்கு தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இருப்பினும் சரணாலயம் மூடப்பட்டிருப்பதால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் சரணாலயம்திறக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைவர்.












Click it and Unblock the Notifications