பாஸ்போர்ட் அலுவலகங்களில் கூட்டம் காலி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பாஸ்போர்ட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும், மாவட்ட தலைநகரங்களிலேயே பாஸ்போர்ட் விண்ணப்பங்களைக்கொடுக்கும் வசதி வந்து விட்டதாலும், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின்எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

பாஸ்போர்ட் கட்டணம் சமீபத்தில் தான் ரூ. 300லிருந்து ரூ. 1000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் பாஸ்போர்ட் கோரிவிண்ணப்பிப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பால் பெரிதும்பாதிக்கப்பட்டிருப்பது திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம்தான்.

திருச்சி அலுவலகத்திற்கு தினசரி 1000 விண்ணப்பங்கள் வரை வருவதுண்டு. ஆனால் இப்போது 500 விண்ணப்பங்கள் வரைமட்டுமே வருகின்றன. இதற்கு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டண அதிகரிப்பே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாது, மாவட்டத் தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களிலும், தபால் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட்பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனாலும் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கைகுறைந்து விட்டது என்கிறார்கள்.

தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்பாஸ்போர்ட விண்ணப்பங்களை திருச்சி அலுலவகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இப்போது பாஸ்போர்ட் பெறுவது எளிமையாக்கப்பட்டு விட்டதால் திருச்சி அலுவலகத்திற்கு அனைவரும் நேரடியாக வரத்தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர சும்மா ஒரு பேஷனுக்காக பாஸ்போர்ட் வாங்கி வைத்துக் கொள்வதுதமிழகத்தில் ஒரு பேஷனாகி வந்தது. இவர்களில் பலர் விமானத்தை வானத்தில் பார்த்தோடு சரி. கட்டண உயர்வால் இந்த பேஷன்ஷோ குறைந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+