பா.ம.க. எதிர்க்கும்: கம்யூனிஸ்ட்கள் நடுநிலை
சென்னை:
பிரபாகரனைப் பிடிக்கக் கோரும் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகிக்கலாம் என்று தெரிகிறது.
வீரமணியின் நிலை:
இந் நிலையில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்தத் தீர்மானத்தைஅரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதே நேரத்தில்ஜெயலலிதா எடுத்துள்ள நிலைப்பாடு நமக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால், அமைதி முயற்சிகள் தீவிரமடைந்துநிலையில் இந்தத் தீர்மானம் தேவையா? என்பதை அரசு யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீரமணி.
புலிகளை ஆதரித்தாலும் ஜெயலலிதாவைக் கோபப்படுத்தாத வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார் வீரமணி.
வாழப்பாடி ஆதரவு:
அவ்வப்போது ஜெயலலிதாவை ஆதரித்தும் எதிர்த்தும் வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடிராமமூர்த்தி இந்த தீர்மான விவகாரத்தில் முதல்வரை ஆதரிக்கிறார்.
புலிகளை ஜெயலலிதா இரும்புக் கரம் கொண்டு அடக்குவார் என்று வாழப்பாடி கருத்துத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications