மதுரை: காரை வழிமறித்து ரூ.10 லட்சம் கொள்ளை
மதுரை:
சிவகங்கையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் மதுரையில் உள்ள ஒரு வங்கியிலிருந்து பணத்தைஎடுத்துச் சென்றபோது, அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ.10.10 லட்சத்தைக்கொள்ளையடித்துச் சென்றது.
இந்தத் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் கேஷியரான ஸ்ரீதர், வேறு இரு ஊழியர்களை அழைத்துக் கொண்டு காரில்மதுரைக்கு வந்தார்.
மதுரையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.10.10 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, அதே காரிலேயே அவர்கள்மீண்டும் சிவகங்கைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரிங் ரோட்டில் சிலைமான் அருகே 6 பேர் கொண்ட ஒரு கும்பல், திடீரென்று இவர்களுடைய காரைவழிமறித்தது. ஆனால் கார் நிற்காமல் போக முயற்சிக்கவே, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த கடப்பாரைக் கம்பியால் காரின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து கார் நின்ற பின்னர் அவர்கள் கொண்டு வந்த பணத்தைக் கேட்டனர். ஆனால் ஏற்றுமதி நிறுவனஊழியர்கள் பணப் பையைத் தர மறுத்தனர்.
ஆத்திரமடைந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் அந்த ஊழியர்களை அரிவாளால் அவர்களை வெட்டமுயற்சித்தான். இதில் ஒருவருடைய நெஞ்சுப் பகுதியில் லேசான அரிவாள் வெட்டு விழுந்தது.
இதையடுத்து பயந்துபோன ஊழியர்கள் பணப் பையை அந்தக் கும்பலிடம் கொடுத்து விட்டனர். பணப் பையைப்பிடுங்கிக் கொண்ட கொள்ளைக் கும்பல், காரின் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீதர் கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்துகொள்ளைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications