ஹால் டிக்கெட் கிடைக்காததால் மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
பத்தாவது வகுப்புத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கிடைக்காத வேதனையில் 18 வயதுப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி புனித மேரி காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் டூடோரியல் மூலம் பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதவிண்ணப்பித்திருந்தார்.
ஆனால் பரிட்சை எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரண்யா,வேதனையடைந்தார்.
இதையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டு இறந்தார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது அண்ணன் ராஜேஷுக்கு உடலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications