வள்ளியூர் அருகே மணல் லாரி கவிழ்ந்து 4 தொழிலாளிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே மணல் லாரி கவிழ்ந்ததில் அதன் மேல் அமர்ந்து பயணம் செய்த 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
திசையன் விளையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒரு லாரி மணல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
வள்ளியூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த லாரி திடீரென்று நிலை தடுமாறி அங்கிருந்த ஒரு வீட்டுக்குள்புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மணல் மீது அமர்ந்து பயணம் செய்த நான்கு தொழிலாளர்களும் கவிழ்ந்த லாரியின் அடியில் சிக்கிபரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டுக்குள் இருந்த ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications