குஜராத் தேர்தல்: அந்தர் பல்டி அடித்த பாஜக
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்கும் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) மக்களவை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் வெளியிலும் எதிர்க் கட்சி மற்றும்தெலுங்கு தேச எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
மோடியை நீக்கியே தீர வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ள தெலுங்கு தேசம் கட்சியும்கூட பிடிவாதமாக இருந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்றும் மக்களவையில் எதிர்க் கட்சி மற்றும் தெலுங்கு தேச எம்.பிக்கள் பெரும் அமளியைஏற்படுத்தினர். மக்களவையின் 184வது விதியின்படி மோடி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்என்று கோரி இவர்கள் கூச்சல் எழுப்பினர்.
ஆனால் வழக்கம்போல் பாஜகவினரும் இதற்கு மறுப்பு தெரிவித்து பதிலுக்குக் கூச்சலை எழுப்பினர். இதையடுத்துஎதிர்க் கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதி வரை சென்று கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதனால் அவை கூடி பத்துநிமிடங்கள்கூட ஆகாத நிலையில் இன்று முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகரானபி.எம். சயீது அறிவித்தார்.
எதிர்க் கட்சிகள் பேரணி, போராட்டம்:
மக்களவை ஒத்திவைக்கப்பட்டதும் அவையை விட்டு வெளியே வந்த எதிர்க் கட்சி எம்.பிக்கள், நாடாளுமன்றத்தின்வாசலிலும் மோடியை நீக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்களுடன் தெலுங்கு தேசம்எம்.பிக்களும் சேர்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
அதன் பிறகு சமாஜ்வாடி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கியமக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே மோடியை நீக்க வேண்டும் என்றுகோரி ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆனால் இந்த ஊர்வலத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.
சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், இந்தியகம்யூனிஸ்ட் தலைவர் பரதன் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கெளடாஆகியோர் இந்த ஊர்வலத்தை நடத்திச் சென்றனர்.
குஜராத் வன்முறை தொடர்பான விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக பிரதமர் வாஜ்பாய் பேசி வருவதாகஅவர்கள் குற்றம் சாட்டினர்.
மோடியை நீக்கம் செய்யக் கோரி தேசிய அளவில் இந்தப் போராட்டம் தீவிரமாகும் என்றும் அவர்கள்தெரிவித்தனர்.
நாளை அனைத்துக் கட்சி கூட்டம்:
இதற்கிடையே குஜராத் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளை சயீத்கூட்டவுள்ளார்.
தொடர்ந்து மூன்று நாட்களாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தான் இந்தக் கூட்டத்தைக்கூட்டவுள்ளதாக சயீது நிருபர்களிடம் கூறினார்.
ராஜ்யசபாவும் ஒத்திவைப்பு:
இதற்கிடையே ராஜ்யசபாவிலும் மோடி விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சி எம்.பிக்கள் இன்று அமளியில்ஈடுபட்டனர்.
ராஜ்யசபாவுக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு எம்.பிக்கள் இன்று பதவியேற்றனர். அவர்கள் பதவியேற்கும்வரை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பொறுமையுடன் இருந்தனர்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த மறு விநாடியே, எதிர்க் கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.அவையின் 170வது பிரிவின் கீழ் மோடி விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள்போட்ட கூச்சல் பெரும் அமளியாக வெடித்தது.
இதைத் தொடர்ந்து இன்று முழுவதும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைவரும் துணைஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த் அறிவித்தார்.
பா.ஜ.க. பல்டி:
இந் நிலையில் குஜராத்தில் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போகிறோம்என்று கூறிக் கொண்டு காலையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர் நரேந்திர மோடி.
கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவர், தேர்தல் குறித்து ஏதும் பேசப்படவில்லை. அதை அப்புறம்பேசுவோம் என்றார்.
அங்கு மோடியைத் தான் நீக்க வேண்டும், தேர்தல் நடத்தக் கூடாது என்று தெலுங்கு தேசம் நிபந்தனை விதித்துவருவது தான் பா.ஜ.க. அடித்த பல்டிக்குக் காரணம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications