3 தொகுதிகளுக்கு மே 31ல் இடைத் தேர்தல்
டெல்லி:
தமிழகத்தில் காலியாக உள்ள வாணியம்பாடி, சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று சட்டசபைத்தொகுதிகளிலும் வரும் மே 31ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று துணைத் தேர்தல் கமிஷனர் ஜாஇன்று (புதன்கிழமை) கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியுடன் சேர்த்து சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரிமாதத்திலேயே தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் கூறி, அந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி இந்த இரண்டு தொகுதிகளிலும்வாக்காளர் பட்டியல்கள் சரிசெய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன.
இதற்கிடையே அச்சிறுப்பாக்கம் தொகுதி பாமக எம்.எல்.ஏவான செல்வராஜ் இறந்து விட்டதால், அத்தொகுதியும்தற்போது காலியாகவே உள்ளது.
எனவே இந்த மூன்று தொகுதிகளுமே தற்போது தேர்தலுக்குத் தயாராக உள்ளதால், அங்கு மே 31ம் தேதி தேர்தல்நடைபெறும் என்று ஜா தெரிவித்தார்.
கோவா சட்டசபைத் தேர்தல் மே 30ம் தேதி நடைபெறும் என்று இன்று மாலை அறிவித்த ஜா, அத்துடன் சேர்த்துமூன்று மக்களவை மற்றும் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கும் மறுநாளான 31ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும்கூறினார்.












Click it and Unblock the Notifications