4 தொகுதிகளில் போட்டியிட்ட ஜெ. மீது நடவடிக்கை கோரி திமுக வழக்கு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது 4 தொகுதிகளில்போட்டியிட மனு செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக தொழிற்சங்க செயலாளரும், வட சென்னை எம்.பியுமான செ. குப்புசாமி இந்த வழக்கைத் தாக்கல்செய்துள்ளார். அவர் தனது மனுவில்,
ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிடஜெயலலிதா மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால் தேர்தல் கமிஷன் விதிறைகளின்படி ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாது.
எனவே தேர்தல் விதிமுறையை மீறிய ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் கமிஷனுக்குகோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்குமாறுதேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் குப்புசாமி.












Click it and Unblock the Notifications