சந்திரிகா திடீர் இந்தியா வருகை: பிரதமரை சந்திக்கிறார்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, புலிகள் தலைவர் பிரபாகரன் இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவிவரும் நிலையில் அதை எதிர்த்து வருகிறார் சந்திரிகா.

கடந்த வாரம் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்து இலங்கையில் அமைதி திரும்ப இந்தியவின் உதவியைக்கோரினார். இந் நிலையில் பிரபாகரனை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரிகா திடீரென இந்தியா வருவதுபுருவங்களை உயர்த்தியுள்ளது.

அவர் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அவர்வரும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது வருகை தேதிமறைக்கப்படுவதாகத் தெரிகிறது.

மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா அறக்கட்டளை சார்பில் நடக்கும் கருத்தரங்கில் நினைவுஉரையாற்ற அவர் டெல்லி செல்வதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் நிருபர்களிடம் கூறினார்.23ம் தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

பிரச்சனையான தீர்மானங்களும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் சந்திரிகா உரை நிகழ்த்தவுள்ளார்.

அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், எதிர்க் கட்சித் தலைவரும் மறைந்த ராஜிவ் காந்தியின்மனைவியுமான சோனியா காந்தி ஆகியோருடனும் சந்திரிகா ஆலோசனை நடத்துவார்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அவர் பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் அவர் டெல்லியில் இருந்து தொலைபேசியில் உரையாடலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

ரணிலுக்கு அறிவுரை:

இந் நிலையில் புலிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளாமல் கடுமையான நிலையில் இருந்து பேச்சு நடத்துமாறுஅந் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு சந்திரிகா அறிவுரை கூறியுள்ளார்.

அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஹரீம் இதனை நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இது தொடர்பாக ரணிலுக்கு ரகசிய கடிதம் எழுதவும் சந்திரிகா திட்டமிட்டுள்ளார். புலிகள்மீதான தடையை நீக்கம், வட-கிழக்கில் சுயாட்சி பெற்ற அரசை அமைக்க அனுமதிப்பது ஆகியவற்றை சந்திரிகாஎதிர்க்கவில்லை.

ஆனால், இதன்மூலம் ஜனநாயகம், மனித உரிமைகள், அனைத்து இனத்தினரின் நன்மைகள் ஆகியவை காக்கப்படவேண்டும் என்பதைத் தான் சந்திரிகா வலியுறுத்துகிறார்.

தமிழர்கள் நிறைந்த வட-கிழக்கில் புலிகள் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைக்க அனுமதி தரும்போது அங்குஅனைத்து இனத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்த இடைக்கால ஆட்சி அமைக்க புலிகளுக்கு அனுமதி தருவதுடன் பிரச்சனை தீர்ந்துவிடாது. நீண்டகாலஅரசியல் தீர்வுக்கு அது உதவும் வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளை புலிகள் மதிக்க வேண்டும் என்பதை அவர்களிடம் அரசு கடுமையாக எடுத்துச் சொல்லவேண்டும். அதன் பின்னர் தான் தடையை நீக்க வேண்டும்.

புலிகளின் பிரச்சனையை மட்டும் தீர்த்து வைக்காமல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் செயல்களில்அரசு ஈடுபட வேண்டும் என்றார் ஹரீம் பெரிஸ்.

அதே நேரத்தில் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்குபதிலளிக்க பெரிஸ் மறுத்துவிட்டார். இதன்மூலம் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றகோரிக்கையை சந்திரிகா ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+