ஓ.. மெரீனா...: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
உலகின் மிக நீளமான இயற்கைக் கடற்கரையான மெரீனாவைப் பாதுகாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரை முழுக்க முழுக்க ஓபன் டாய்லெட்டாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் கடற்கரைநாற்றமெடுத்துப் போய் உள்ளது.
காலையில் கடற்கரைச் சாலையில் மட்டும் தான் வாங்கிங் அண்ட் ஜாக்கிங் போக முடிகிறது. தப்பித் தவறிகடற்கரையில் காலை வைத்தால் நடக்கக் கூடாதது நடந்து விடும்.
இது தவிர பாலித்தீன் பைகள், பழைய பேப்பர்கள், வீடுகளின் குப்பை என கடற்கரை திறந்தவெளி குப்பைக் காடாகமாறி வருகிறது.
மீனவர்களின் குடிசைகளும் கடற்கரையை கொஞ்சம் கொஞ்சமாய் ஆக்கிரமித்து வருகின்றன.
இதை அரசும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை.
இதை பிளாட் போட்டு விற்க இதுவரை எந்த டெக்னிக்கும் நம் அரசியல்வாதிகளால் கண்டுபிடிக்கப்படவில்லை.கடற்கரையில் நிலம் வாங்க ஆள் இல்லை என்பது இதற்குக் காராணமாக இருக்கலாம்.
இதனால் மெரீனா கடற்கரை நல்லோர், தீயோர் யாரது கவனிப்பும் இல்லாமல் மிக வேகமாக சீர்கெட்டு வருகிறது.
இந் நிலையில் மெரீனாவைக் காக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், உலகின் மிக நீளமான இயற்கை கடற்கரையான மெரீனாவின் சுற்றுப்புறத்தையும் தூய்மையையும்பாதுகாக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலையிைலானடிவிஷன் பெஞ்ச் இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications