சுழற்சி முறையில் மேயர் பதவியா? - தமிழக அரசு மறுப்பு
சென்னை:
சுழற்சி முறையில் மேயர் பதவி அமைக்கப்பட வேண்டும் என்ற தமாகா எம்.எல்.ஏவின் யோசனையை தமிழகஉள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் இன்று (புதன்கிழமை) நிராகரித்தார்.
உள்ளாட்சித் துறை அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவாதம் தமிழக சட்டசபையில் நேற்றும்இன்றும் நடந்தது.
இந்த விவாதத்தின்போது நேற்று பேசிய தமாகா எம்.எல்.ஏவான விநாயகமூர்த்தி பேசுகையில்,சிறுபான்மையினரும் பெண்களும் மேயர் பதவியை வகிக்கும் பொருட்டு சுழற்சி முறையில் அப்பதவியை அமைக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.
இந்நிலையில் விவாதத்திற்குப் பதிலளித்து துரைராஜ் பேசியதாவது:
விதிமுறைகளின்படி ஒரு மேயரை மக்கள் நேரடியாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். மக்கள் தேர்ந்தெடுப்பவர்தான்தொடர்ந்து மேயராகப் பதவி வகிக்க முடியும்.
அந்த மேயர் பதவியை மற்றவர்களும் வகித்தால், மக்களால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அர்த்தமே இல்லாமல்போய்விடும்.
அதனால் சுழற்சி முறையிலெல்லாம் மேயர் பதவியை மாற்றியமைக்க முடியாது என்றார் துரைராஜ்.












Click it and Unblock the Notifications