நாமக்கல்: 3 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்துக் கொன்ற ஒரு பெண் தானும்தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் உலகப்பட்டியைச் சேர்ந்தவர் கமலாம்பாள். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன்உள்ளனர்.
இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து போன கமலாம்பாள், சம்பவத்தன்று தன்னுடைய குழந்தைகளை அழைத்து, அவர்களுக்குவிஷத்தை ஊட்டி விட்டு குடிக்கச் செய்தார். விஷத்தை அருந்திய குழந்தைகள் மூவரும் சிறிது நேரத்திலேயேவாயில் நுரை தள்ளி இறந்தனர்.
அதற்குள் தானும் விஷத்தைக் குடித்த கமலாம்பாள், அடுத்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications