புளுபிலிம் பிரகாஷ் மனைவி விவாகரத்து வழக்கு: ஜூன் மாதம் ஒத்திவைப்பு
சென்னை:
புளுபிலிம் புகழ் டாக்டர் பிரகாஷிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி ஸ்ரீலட்சுமி தாக்கல் செய்திருந்தமனுவை விசாரித்த நீதிமன்றம் பிரகாசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஸ்ரீலட்சுமி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
ஆபாச வழக்கில் சிக்கிய பிரகாஷ் நல்லவர் போல் நடித்து என்னை ஏமாற்றியிருக்கிறார். அதனால் அவரிடமிருந்துபிரிந்து வாழ விரும்புகிறேன். எனவே, விவாகரத்து வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டாக்டர் பிரகாஷை பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குக்காக சிறையிலிருந்த பிரகாஷை போலீஸார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில்பேசிய பிரகாஷ் பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக் கொணட நீதிபதி மாலா வழக்கு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications