கோவை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கில் 5வது நபர் கைது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக லாசர்என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 28ம் தேதி கோயம்புத்தூர்-புதூர் பகுதி ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான முருகேசன் (33) ஆறு பேர்கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகதனிப் படை அமைத்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
அதன்படி கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷாஜகான், அபுதாஹீர், அப்பாஸ் மற்றும் சிராஜ் ஆகிய நான்கு பேரையும்போலீசார் ஏற்கனவே கைது செய்து விட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மாலை குனியமுத்தூர் பகுதியில் லாசர் (25) என்பவரைப் போலீசார் கைதுசெய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications