""என்னைப் பதவி விலகச் சொல்ல நீங்கள் யார்?"" - ஜெ.க்கு ஸ்டாலின் காட்டமான கேள்வி

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

""மேயர் பதவியிலிருந்தோ எம்.எல்.ஏ. பதவியிலிருந்தோ என்னை விலகச் சொல்வதற்கு இவர் யார்? இவருக்குஎன்ன உரிமை இருக்கிறது?"" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவைத் தாக்கி சென்னை மாநகர மேயர் ஸ்டாலின்ஆவேசத்துடன் பேசினார்.

நெய்வேலியில் திமுக சார்பில் நடந்த பட்ஜெட் கண்டனக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறியதாவது:

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்கள். ஆட்சியில் இல்லைஎன்பதற்காக நாங்கள் ஒன்றும் துறவறம் போகவில்லை.

எங்களைப் போல வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. தோல்வியடைந்த கட்சியும் கிடையாது. இருந்தாலும் நாங்கள்இரண்டையும் ஒன்றாகத்தான் கருதுகிறோம்.

கடந்த 1996 முதல் 2001 வரை நடந்த எங்கள் ஆட்சியில் ஒரு தவறு நடந்தது என்று குற்றம் சொல்ல முடியுமா? 30ஆண்டுப் பணிகளை எல்லாம் ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்தோம்.

கடந்த 1939ம் ஆண்டு முதல் கட்டிக் காப்பாற்றப்பட்டு வரும் மேயருக்கான மரபுகள் தொடர்ந்து காக்கப்படவேண்டும் என்று கூறினேன். நான் மேயராக இருப்பதால்தான் மரபுகள் மீறப்படுகின்றன என்றால் நான் பதவிவிலகவும் தயாராக இருப்பதாக சட்டசபையில் கூறினேன்.

ஆனால் எம்.எல்.ஏவா, மேயரா எந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள் என்றுஜெயலலிதா கூறினார். என்னைப் பதவி விலகச் சொல்வதற்கு இவர் யார்? அதற்கு இவருக்கு என்ன தகுதிஇருக்கிறது?

ஓட்டுப் போட்டு என்னைத் தேர்ந்தெடுத்த 40 லட்சம் மக்கள் சொல்லட்டும். நான் விலகுகிறேன் என்றார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+