தொடங்கியது கோடைக்கால குதூகலம்: சிறப்பு பஸ்கள் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகரில் கோடைக்காலம் களை கட்டத் தொடங்கி, உல்லாச இடங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்கஆரம்பித்து விட்டதால், சிறப்பு பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

10வது மற்றும் 12வது வகுப்புத் தேர்வுகள் முடிந்து விட்டன. மற்ற வகுப்புத் தேர்வுகளும் முடிவடையும் நிலையில்உள்ளன.

எனவே பரீட்சைகளை முடித்த களைப்பில் உள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்தினருடனும்,நண்பர்களுடனும் உல்லாச இடங்களான கடற்கரை, பொழுதுபோக்குப் பூங்கா ஆகியவற்றுக்குப் படையெடுக்கத்தொடங்கி விட்டனர்.

இதையடுத்து பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே சிறப்பு கோடைக்கால பஸ்களை இயக்க மாநகரபோக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

மெரீனா கடற்கரை, எலியட் கடற்கரை, காந்தி மண்டபம், கிண்டி சிறுவர் பூங்கா, கிஷ்கிந்தா பொழுதுபோக்குப்பூங்கா, வி.ஜி.பி, மாயாஜால், எம்.ஜி.எம்., முட்டுக்காடு படகு குழாம் ஆகிய இடங்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள்இயக்கப்படுகின்றன.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+