செங்கோட்டையன் மீதான ஊழல் வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில் வரும் 26ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றுதனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியது, சொகுசுபஸ் வாங்கியது ஆகியவற்றில் 1 கோடியே 57 லட்சத்து 93 ஆயிரத்து 527 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி தனிநீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 1997ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விசாரணை தொடங்கியது.
அரசுத் தரப்பில் ஆஜரான 75 சாட்சிகளில், 45 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர். எதிர்த் தரப்பு சாட்சிகள் எதுவும்இல்லாத நிலையில் கடந்த 8ம் தேதி இந்த வழக்கு தொடர்பான வக்கீல்களின் விவாதங்கள் முடிவடைந்தன.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வரும் 26ம் தேதி அளிக்கப்படும் என்று இதை விசாரித்த நீதிபதிஅன்பழகன் அறிவித்தார்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செங்கோட்டையன் தவிர, அப்போதைய ஜெ.ஜெ. போக்குவரத்துக்கழகத்தின் இயக்குநர் சேதுராமன், செங்கோட்டையனின் உதவியாளர் எழில் மற்றும் கோபி நடராஜன் ஆகியோர்26ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டார்.
தனி நீதிமன்றம் அளிக்கவுள்ள 21வது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications