இது ஒரு துக்க நாள்: வைகோ ஆவேச அறிக்கை
சென்னை:
இலங்கை அதிபரான சந்திரிகா குமாரதுங்காவுக்கு உடந்தையாகத்தான் விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாநிறைவேற்றியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் தற்போதுதான் அனைத்து தமிழர் அமைப்புகளும், முஸ்லீம்களும், இந்திய வம்சாவளி தமிழர்களும்முதல் முறையாக ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அங்கே சமாதானத் தீர்வு ஏற்பட உதவுவதற்குப் பதிலாக, அதை பாழ்படுத்தும் நோக்கத்தோடுதான் தமிழக அரசுபுலிகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஒரு துக்கத்திற்குரிய நாளாகும்.
ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும். விமோசனம் கிடைக்கட்டும் என்று உலகம் முழுவதும் உள்ளவர்கள்ஆவலோடு மகிழ்கின்றனர்.
இந்த நேரத்தில் பச்சிளம் குழந்தையின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதைப் போல, இலங்கைக்கு இந்தியராணுவத்தை அனுப்பி பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
சந்திரிகாவின் நோக்கத்துக்கு உடந்தையாகத்தான் ஜெயலலிதா இந்தத் திடீர் ஆவேசம் அடைந்துள்ளார் என்றுகருதுகிறேன்.
தமிழக அரசின் இந்தத் தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கக் கூடாது.
தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலையில் அதற்குக் குந்தகம் விளைவிக்கின்ற வகையில்செயல்படவோ இடம் கொடுக்கவோ கூடாது என்று வைகோ அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications