தமிழகத்தில் குடிநீர் பஞ்சம்: நீருக்காக கிராமங்கள் இடையே அடிதடி சண்டை
சென்னை:
தமிழகத்தில் குடிநீருக்காக கிராமங்களுக்கு இடையே சண்டை நடக்க ஆரம்பித்துள்ளது.
சூரிய பகவான் வழக்கம்போல் இந்த கோடையிலும் எல்.டி.சியில் தமிழகத்தில் தங்கியிருக்கிறார். இதனால் வெயில்கொளுத்த ஆரம்பித்துள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பித்துவிடும் வெயில் இரவு 7 மணி வரை விரட்டி விரட்டி அடிக்கிறது. காலை 11 மணி முதல்மாலை 4 மணி வரை உச்சபட்சத்தில் அனல் வீசுகிறது.
இதனால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சமும் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக பெரம்பலூர், அரியலூர், திருச்சிமாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
நகர்ப் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுவிடுவதால் ஓரளவுக்கு நிலைமை சமாளிக்கும் வகையில்உள்ளது.
ஆனால், கிராமப் பகுதிகளில் கண்மாய்கள், குடிநீர் ஊரணிகள், ஏரிகளை நம்பித்தான் வாழ்க்கையே உள்ளது.இந்தக் கண்மாய்கள் மிக வேகமாக வற்றி வருகின்றன.
இந்த நீர் நிலைகளில் நீர் எடுக்க வரும் பக்கத்துக்கு கிராமத்தினரை விரட்டிவிடும் அளவுக்கு நிலைமைமோசமாகியுள்ளது.
நேற்று பெரம்பலூர் மாவட்டம் கீழவெண்மணி என்ற இடத்தில் உள்ள கண்மாயில் நீர் எடுக்கச் சென்ற பெண்களைஅந்தப் பகுதி மக்கள் விரட்டிவிட்டனர். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது.
தாங்கள் விரட்டப்பட்டதை ஊர் பெரியவர்களிடம் அந்தப் பெண்கள் முறையிட்டனர். இதையடுத்து பஞ்சாயத்துப்பேச ஒரு குழு கீழவெண்மணிக்கு வந்தது. ஆனால், அவர்களுக்கும் ஊர்காரர்களுக்கும் இடையே சண்டைமூண்டது.
இதையடுத்து இரு கிராமத்தினரும் கத்தி, கம்புகளுடன் அடிதடியில் இறங்கினர்.
இதில் 10 பேருக்கு மண்டை உடைந்தது. இந்தச் சண்டையில் பெண்களும் சிறுவர்களும் கூட தாக்கப்பட்டனர்.
சண்டையில் இரு ஊர்காரர்களும் எதிர் ஊரின் தெரு விளக்குகளை உடைத்தெறிந்தனர். வீடுகள் மீதும் கல்வீச்சுநடந்தது.
பெரும் கலவரம் நடப்பதற்குள் போலீசார் விரைந்து வந்துவிட்டனர். அனைவரையும் போலீசார் விரட்டியடித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 80 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதே மாவட்டத்தில் வேறு இரு கிராமத்தினர் இடையே தண்ணீருக்காக சண்டை மூண்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications