காற்று வீசவில்லை... அதனால், பல்ப் எரியவில்லை !
நாகர்கோவில்:
காயத்தாறில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திமுழுவதுமாய் நின்றுபோய்விட்டது.
காரணம், இந்தப் பகுதியில் காற்று வீசுவது நின்று போனது தான்.
கயத்தாறிலும் தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் முப்பந்தல் என்ற இடத்திலும்ஆயிரக்கணக்கான காற்றாலைகள் (windmills) நிறுவப்பட்டுள்ளன. இங்கு 5,000 காற்றாலைகள் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி மலைக் குன்றுகளுக்கு இடையில்அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பலத்த காற்று வீசுவது வழக்கம். வழக்கமாக 30 கி.மீ. வேகத்தில் இப்பகுதியில் காற்று வீசும்.
இதன் உதவியோடு இயங்கும் இந்த காற்றாலைகள் வருடத்துக்கு 300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்திசெய்து வந்தன. ஆசியாவிலேயே அதிக அளவில் மின் உற்பத்தி செய்யும் காற்றாலை நிலையம் இது தான்.
இந் நிலையில் இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசுவது கடந்த சில மாதங்களாக நின்றுபோய்விட்டது. காற்றாலைவிசிறிகளை சுழற்றும் அளவுக்கு காற்றின் வேகம் இல்லை.
இதனால், மின் உற்பத்தியும் நின்றுபோய்விட்டது. இதன் காரணமாக இந்தப் பகுதியைச் சேர்ந்த பல்வேறுநகர்களிலும் கிராமங்களில் மின் வினியோகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் முழுக்க முழுக்க அனல் தான் வீசி வருகிறது. காற்று வீசவில்லை.












Click it and Unblock the Notifications