பைக் எடுக்குறீங்களா... 1000 ரூபாய் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் டூ வீலர் ஓட்டுபவர்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

சாலை விதிகளை மீறாமல் இருக்கும் வகையில் ஒழுக்கத்தைக் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு ரோட்டில்செல்லும் எல்லா டூ வீலர்களையும் போலீசார் நிறுத்தி கெடுபிடி செய்து வருகின்றனர்.

லைசென்ஸ்ல போட்டே அழிஞ்சு இருக்கே, லைட்ல கருப்பு வட்டம் வக்கலியே என்று சொத்தை காரணங்களுக்குஎல்லாம் பைன் போட்டு வருகின்றனர் போக்குவரத்துப் போலீசார்.

ஆனால், என்பீல்ட் என்ஜினும் சைக்கிள் பிரேக்குமாக சென்னைக்குள் சுற்றி வரும் கொலைகார மீன் வண்டிகள்,காண்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான அரைபாடி கொலை லாரிகளை இவர்கள்கண்டுகொள்வதில்லை.

பஸ்களை நம்பிப் பயன் இல்லை என்பதால் வேறு வழியில்லாமல் லோன் போட்டு, கடன் வாங்கி ஒரு டி.வி.எஸ். 50அல்லது மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வரும் நடுத்தர மக்கள் போக்குவரத்துப் போலீசின் கையில் சிக்கிசின்னாபின்னாவாகி வருகின்றனர்.

அதிலும் கடந்த ஒரு மாதமாக சென்னை போக்குவரத்துப் போலீசாரின் அடாவடி சொல்ல முடியாத அளவுக்குப்போய்விட்டது. ஒரு நாளைக்கு 100 வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும், குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல்1000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் டிராபிக் சார்ஜென்ட்களுக்கு அரசு உத்தரவிட்டிருப்பதாககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

பொய் வழக்குப் போடுவதை ஒரு கொள்கையாகவே வைத்துக் கொண்டு டூ வீலர்காரர்களை போலீசார் வதைத்து,பணம் பறித்து வருகின்றனர் என்கிறார் இளங்கோவன்.

ஏற்கனவே 5000 கோடி ரூபாய்க்கு வரி போட்டு மக்களை வதைத்து வரும் தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில்தலையிட்டு அப்பாவி டூ வீலர்காரர்களை காக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

அவர் சொல்வதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னை முழுக்க போக்குவரத்துக் காவலர்களின் கெடுபிடி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+