மலேசிய சிறைகளில் வாடும் தமிழர்கள்: மனித உரிமை கமிஷன் நடவடிக்கை
சென்னை:
மலேசியச் சிறைச்சாலைகளில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்கு ஏற்பாடுசெய்யுமாறு, மலேசிய நாட்டு தேசிய மனித உரிமை கமிஷனுக்கு, தமிழக மனித உரிமை கமிஷன் கடிதம்அனுப்பியுள்ளது.
தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்று பிடிபட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் மலேசிய சிறைச்சாலைகளில்கொடுமையான நிலையில் வாடுவதாக சமீபத்தில் "குமுதம்" வாரப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருந்தது.
இதைக் கண்ட தமிழக மனித உரிமை கமிஷன் உறுப்பினரான நீதிபதி சம்பந்தம், இந்த விஷயம் தொடர்பாகமலேசிய நாட்டின் தேசிய மனித உரிமை கமிஷனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியின் மூலம், மலேசிய சிறைகளில் நிலவும் கொடூரமான சூழ்நிலை தெரியவருகிறது.
மலேசிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், குறிப்பாக தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்றதமிழர்கள் மிகப் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகியிருப்பதும் தெரிய வருகிறது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேசிய தேசிய மனித உரிமை கமிஷனைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்குச்சென்று பார்க்க வேண்டும்.
மேலும், அங்கு வாடும் தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்புவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் சம்பந்தம் கோரியுள்ளார்.
மலேசியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல்கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சிறைச்சாலையில் உள்ள கழிப்பறையில்தான் அவர்கள் படுத்துத் தூங்கவேண்டியுள்ளது என்றும், ஓரினச் சேர்க்கைக்கு பிற கைதிகளால் அழைக்கப்படும் அவலம் இருப்பதாகவும் "குமுதம்"செய்தி வெளியிட்டிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications