சோனியாவை உளவு பார்க்கவில்லை : ஜெ மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு போலீஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனை உளவு பார்க்கவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா சட்ட சபையில் இன்று மறுத்தார்.

சோனியா காந்தியை தமிழக உளவுப் பிரிவு போலீசார் உளவு பார்த்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதி ஜெயலலிதா சட்ட சபையில் பேசுகையில் சோனியாவை முரசொலி மாறன் ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார் என்றார். அதற்குதுரைமுருகன், இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டபோது எனது கையில் உளவுத்துறை இருக்கிறது என்று பதிலளித்தார் ஜெயலலிதா.

இந் நிலையில் பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில், சோனியா காந்தியை தமிழக போலீஸ் உளவு பார்க்கவில்லை என்றார்.

இன்று இந்தப் பிரச்சனையை திமுக உறுப்பினர் துரைமுருகன் சட்டசபையில் எழுப்பினார். அவர் கூறுகையில், சோனியாவை உளவு பார்ப்பதாக ஜெயலலிதாசொல்கிறார், பார்க்கவில்லை என்று பன்னீர்செல்வம் சொல்கிறார். இருவரும் சேர்ந்து மக்களை குழப்பி வருகின்றனர் என்றார்.

இதற்கு ஜெயலலிதா பதிலளித்துக் கூறியதாவது:

என்னிடம் உளவுத்துறை உள்ளது என்று நான் கூறியதற்கு சோனியாவையும் மாறனையும் உளவு பார்த்ததாக அர்த்தம் இல்லை. தமிழக போலீசுக்குநாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செய்திகள் வரும். அவர்கள் அச் செய்தியைக் கூறினார்கள். அது சரியா தவறா என்று எனக்கு தெரியாது.

இந்த விஷயத்தில் பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்திலும் எந்த மாறுபாடும் இல்லை. நான் சொல்லித் தான் அவர் அந்த விளக்கத்தையே தந்தார்என்றார் ஜெயலலிதா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+