இந்தியத் தூதரக ஊழியரைக் கடத்திச் சென்று தாக்குதல்: பாகிஸ்தான் வெறிச் செயல்
இஸ்லாமாபாத்:
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியரை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. கடத்திச் சென்றுகடுமையாகத் தாக்கியுள்ளது. காலையில் கடத்திச் செல்ல்பட்ட அவரை 9 மணி நேரத்திற்குப் பின் மாலையில்விடுவித்தது.
அவரது உடலெங்கும் அடிபட்ட காயங்கள் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
3 தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரியை டெல்லி போலீசார் கைதுசெய்தனர். உடனடியாக வரை நாட்டை விட்டு வெளியேற்றியது இந்தியா.
இந் நிலையில் இந்திய தூதரகத்தின் ஊழியர் அதிகாரி ஐ.எஸ்.ஐயால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஏ.கே. கண்ணாஎன்ற அந்த ஊழியர் இன்று காலை 8.25 மணிக்கு தூதரகத்துக்குச் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வெளியேவந்தார்.
இந்தியத் தூதரகத்தின் பஸ்சில் ஏறுவதற்காக சென்ற அவரை 15 பேர் கொண்ட ஐ.எஸ்.ஐ. அமைப்பின்ஏஜெண்டுகள் வழிமறித்தனர். அவர்களிடம் கண்ணா விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவரைஇன்னொரு காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்துவிட்டனர்.
பஸ்சில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் அதைத் தடுத்தும் கூட அவர்களை தள்ளிவிட்டுவிட்டு கண்ணாவைக்கடத்திச் சென்றனர்.
இந்தியா எச்சரிக்கை:
கண்ணா கடத்திச் செல்லபட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின்செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
அவரை உடனடியாக இந்தியத் தூதரகத்திடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். அவர் மீது ஏதாவது தாக்குதல்நடந்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதை கூறிக் கொள்கிறோம். அவரை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும்.
இந்தக் கடத்தல் வியன்னா சர்வதேச ஒப்பந்தத்துக்கும், தூதரக அதிகாரிகளை பாதுகாப்பது தொடர்பானஇந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தங்களுக்கும் எதிரானது என்றார்.
கண்ணா எங்கு கொண்டு செல்லப்பட்டார்? அவர் நிலை என்ன என்ற விவரத்தை பாகிஸ்தான் அரசுவெளியிடவில்லை.
இது குறித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
காயங்களுடன் விடுதலை:
இந் நிலையில் கண்ணா இன்று மாலை 5 மணியளவில் விடுவிக்கப்பட்டார். அவரை ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள்தூதரகத்தின் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து காவல் நிலையத்தில் இருந்து தூதரகத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய போலீசார்,கண்ணாவை வந்து தூக்கிக் கொண்டு போங்கள் என்று திமிராகப் பேசினர்.
இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் காவல் நிலையம் சென்று கண்ணாவை மீட்டு அழைத்து வந்தனர். அவரதுஉடலெங்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. எச்சிலைக் கூட விழுங்க முடியாத அளவுக்கு தாக்கப்பட்டுள்ளார்.அவரை ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவினர் கடுமையாகத் தாக்கியிருக்கிறது.
இதையடுத்து கண்ணாவை தூதரக அதிகாரிகள் நேரடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்சிகிச்சை பெற்று வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் தனது தூதரை இந்தியா வாபஸ் பெற்றது. ஆனால், பாகிஸ்தான் தூதர் தொடர்ந்துடெல்லியில் இருந்து வருகிறார்.
அதே போல பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நடமாட்டத்தையும் இந்தியா கட்டுப்படுத்தியது. எந்த நகரில் தூதரகம்இருக்கிறதோ அந்த நகர எல்லையைத் தாண்டிச் செல்லக் கூடாது என தடை விதித்தது.
இதே தடையை பாகிஸ்தானும் இந்திய தூதரக அதிகாரிகள் மீது விதித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications