""அந்தர் "பல்டி" அடிக்கும் ஜெ.க்கு பன்னீர்தான் பலி கடா"": கருணாநிதி
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வேவு பார்க்கவில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாமறுத்துள்ளதன் மூலம் அவர் அந்தர் "பல்டி" அடித்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று குற்றம்சாட்டினார்.
சோனியாவை மத்திய அமைச்சர் மாறன் சந்தித்துப் பேசினார் என்று கடந்த வாரம் சட்டசபையில் ஜெயலலிதாதெரிவித்தார்.
இதையடுத்து தமிழக அரசு சோனியாவை வேவு பார்ப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் புகார்கூறியிருந்தார். இந்தப் புகாரை நேற்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் வன்மையாக மறுத்தார்.
இதுகுறித்து இன்று கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த வாரம்தான் போலீஸ் உளவுத்துறை மூலம் மாறன்-சோனியா சந்திப்பு குறித்து ஜெயலலிதா சட்டசபையில்கூறினார்.
ஆனால் அதற்குள்ளாகவே நேற்று சட்டசபையில் பன்னீர்செல்வம் மூலம் சோனியா வேவு பார்க்கப்படவில்லைஎன்று அறிவித்து விட்டார்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைத் தன்னுடைய வழக்கமாகவே கொண்டுவிட்டார் ஜெயலலிதா. ஆனால்இப்படி அந்தர் "பல்டி" அடித்துள்ளதன் மூலம் பாவம் பன்னீரைத்தான் ஜெயலலிதா "பலி கடா" ஆக்கிவிட்டார்.
பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று ஜெயலலிதா துடியாகத் துடித்தார். ஆனால் வாஜ்பாய் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.
இதையடுத்துதான் தற்போது சோனியாவின் காலில் விழுந்து அவரையும் வாரி விடுவதற்கு ஜெயலலிதா தவியாய்தவித்துக் கொண்டிருக்கிறார் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications