மோடியால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஸ்தம்பிப்பு
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விவகாரத்தால் நாடாளுமன்றம் 5வது நாளாக தொடர்ந்து ஸ்தம்பித்தது. இன்றும்ராஜ்யசபாவும் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டன.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று கோரி வரும் எதிர்க் கட்சிகளும் தெலுங்கு தேசம் போன்ற மத்தியஅரசின் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன.
மோடி விவகாரம் தொடர்பாக அவை விதி 184வது பிரிவின் கீழ் விவாதிக்க வேண்டும் என அவர்கள் கோரிவருகின்றனர். இந்த விதியின் கீழ் விவாதம் நடத்தினால் ஓட்டெடுப்பு நடக்கும்.
அப்போது தெலுங்கு தேசம் எதிர்த்து வாக்களித்தால் மத்திய அரசுக்கு மெஜாரிட்டி இல்லாமல் போகும். அதைவைத்து அரசைக் கவிழ்க்க எதிர்க் கட்சிகள் முயலும். இதனால், ஓட்டெடுப்புக்கு ஒப்புக் கொள்ள பா.ஜ.க. மறுத்துவருகிறது.
இந்த ஓட்டெடுப்பு விவகாராத்தால் கடந்த 5 நாட்களாக இரு அவைகளும் செயல்படவில்லை. வழக்கம்போல்இன்று அவை கூடியதும் ஓட்டெடுப்பு கோரி எதிர்க் கட்சிகள் கோஷம் எழுப்ப பா.ஜ.கவினர் எதிர்கோஷம் எழுப்பஒரே கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன. கடந்த 4 நாட்களாக இது தான் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் குஜராத்தில் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் அங்கு வன்முறை நடந்தது.போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறைக் கும்பலைக் கலைத்தனர்.
சிறுபான்மையினரை தாக்குவதை தடுக்க முடியாமல் அல்லது தடுக்காமல் இருந்து வரும் மோடியைப் பாதுகாக்கமத்திய அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது அதன் கூட்டணிக் கட்சிகளையே எரிச்சல்படுத்தியுள்ளது.
இந் நிலையில் அவையை நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு லோக்சபா துணை சபாநாயகர் சயீத்ஏற்பாடு செய்திருந்தார். இதிலும் 184வது விதிப்படி விவாதம் நடத்த எதிர்க் கட்சிகள் வலியுறுத்த பா.ஜ.கவினர்மறுக்க எந்த முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் பாதியிலேயே தோல்வியில் முடிந்தது.
இக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய், எதிர்க் கட்சித் தலைவர் சோனியா காந்தி இருவரும் கலந்து கொண்டனர்.ஆனால், இருவரும் தங்கள் கருத்தையே தொடர்ந்து வலியுறுத்தியதால் கூட்டத்தில் முடிவு எதுவும்எடுக்கப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications