ஜெயா டிவி கேமராமேனுக்கு அடி-உதை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் ஜெயா டிவியின் கேமராமேன் ஒரு காண்ட்ராக்டரின் கூலியாட்களால் தாக்கப்பட்டார்.
பத்திரிக்யாைளர் மீதான இத் தாக்குதலைக் கண்டித்து இன்று நிருபர்கள் புதுவை சட்டப் பேரவை நிகழ்ச்சிகளைப்புறக்கணித்தனர்.
பிரபு என்ற அந்த கேமராமேன் உப்பளம் பகுதியில் படகுகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅங்கு வந்த காண்ட்ராக்டர் ஒருவர் எதற்காக படம் பிடிக்கிறாய் என்று கேட்டார். ஒரு நிகழ்ச்சிக்காக படம்பிடிப்பதாகக் கூறிய பிரபுவை அவர் தாக்கினார், தொடர்ந்து அவரது கூலியாட்களும் அவரைத் தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த பிரபு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தமிழக போலீசுக்கு சற்றும் சளைக்காதபாண்டிச்சேரி போலீஸ் அந்தப் புகாரை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்தப் பிரச்சனையை சட்டசபையில் அதிமுக உறுப்பினர் அன்பழகன், திமுக உறுப்பினர் சிவா ஆகியோர்கிளப்பினர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.
ஆனால், இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை பத்திரிக்கையாளர்கள்ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதிமுக ஆட்சி நடந்து ஜெயா டிவி நிருபர்தாக்கப்பட்டிருந்தால் அந்த ஊர் போலீஸ் என்ன மாதிரி நடவடிக்கை எடுத்திருக்கும் என்று நாம் சொல்லிஉங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
இந் நேரம் அந்த காண்ட்ராக்டரை கந்தல் துணியாகியிருப்பாகள் போலீசார். காங்கிரஸ் ஆட்சி நடப்பதால்தப்பிவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications