இடைத் தேர்தல்: களத்தில் குதிக்கத் தயாராகும் கட்சிகள்
சென்னை:
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து திமுக தீவிரஆலோசனை நடத்தி வருகிறது.
மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் மே 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஆலோசனைகளில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
அதிமுக இதுவரை தேர்தல் தொடர்பான எந்தப் பணிகளையும் ஆரம்பிக்கவில்லை என்றாலும் 3 தொகுதிகளிலும்அது போட்டியிடும் என்று தெரிகிறது.
சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏவான சைதை துரைசாமி அல்லது நடிகர் ராதாரவிஆகியவர்களில் ஒருவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாணியம்பாடி தொகுதியை இந்திய தேசிய லீக் கட்சிக்கு விட்டுத் தரலாம் என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் அதிமுகவின் ஆதரவுடன்தான் கடந்த தேர்தலில் பா.மக. வெற்றி பெற்றது. எனவேஇந்த முறை இத்தொகுதியில் அதிமுகவே போட்டியிடவுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும்போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அச்சிறுப்பாக்கம் தொகுதியை கூட்டணிக் கட்சியான பாமகவுக்குஅது விட்டுக் கொடுக்கும்.
சைதாப்பேட்டை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் சரியாகத் தெரியவில்லை.
வாணியம்பாடி தொகுதியைப் பொறுத்தவரை கவிஞர் அப்துல் ரகுமான் அல்லது முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. பிரபல பாடகரான நாகூர் அனிபாவும் இந்தப்பட்டியலில் உள்ளார்.
அயோத்தி மற்றும் குஜராத் பிரச்சினைகளில் பாஜகவுக்கு எதிராக திமுக சரியாகக் குரல் எழுப்பாததால் திமுக மீதுமுஸ்லீம்கள் அதிருப்தியுடன் இருப்பதாகத் தெரிகிறது.
இதனால் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுவது குறித்து திமுக நிறைய யோசித்து வருகிறது. இருப்பினும்சரியான வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை திமுகவிடம் உள்ளதாம்.
பாஜகவைப்பொறுத்தவரை இந்தத் தேர்லில் அது போட்டியிடாது என்றே தெரிகிறது. திமுகவுக்கு அது ஆதரவுதெரிவிக்கும் அல்லது போட்டியிலிருந்து விலகிக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளில் மதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்களை அறிவிப்பதில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா யாருமேஎதிர்பாராத அளவுக்குத்தான் இதுவரை செயல்பட்டு வந்துள்ளார். அதுபோலவே, சட்டசபை இடைத் தேர்தலிலும்அவர் அதிரடி வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிப்பார் என்று தெரிகிறது.
அதிமுக ஆட்சி மீதான கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தலை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் கூட கடந்த சிலமாதங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போது நடந்த வன்றைச் சம்பவங்கள், அட்டூழியங்கள் ஞாபகத்திற்குவந்து, தேர்தல் அமைதியாக நடந்தாலே போதும் என்ற எண்ணம் மட்டுமே தற்போது தலை தூக்கி நிற்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications