மும்பை தாதாவின் கூட்டாளியை சுட்டுக் கொன்ற சென்னை போலீசார்
சென்னை:
மும்பையைச் சேர்ந்த பிரபல ரவுடியான சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் காட்டியாஎன்பவனை சென்னை போலீசார் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
புனேயைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவரைப் பெரும் தொகை கேட்டு சஞ்சய் மிரட்டிக் கொண்டிருந்தான்.இதையடுத்து சென்னையில் வசிக்கும் அந்த ஓட்டல் அதிபரின் சகோதரர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சென்னையில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து சஞ்சயைநேற்று மாலை கைது செய்தனர்.
இந்நிலையில் சஞ்சயை ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிண்டி-ஈக்காடுதாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது,இன்று அதிகாலை நான்கு மணியளவில் திடீரென்று அந்த ஜீப் சாலைத் தடுப்பில் மோதி லேசானவிபத்துக்குள்ளானது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட சஞ்சய், ஜீப்பிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணியின் கைத்துப்பாக்கியைஉருவி எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் சஞ்சயைத் துரத்தினர். அவர்கள் துரத்துவதைக் கண்டவுடன் அவன் போலீசாரைநோக்கிச் சராமாரியாகச் சுட ஆரம்பித்தான். இதில் ராஜாமணி உள்பட ஐந்து போலீசாருக்குக் குண்டுக் காயம்ஏற்பட்டது.
இதையடுத்து போலீசாருக்கும் சஞ்சய்க்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் போலீசாரின்துப்பாக்கிகளிலிருந்து பாய்ந்து வந்த குண்டுகள் சல்லடையாகத் துளைக்க, சஞ்சய் சுருண்டு விழுந்து அந்தஇடத்திலேயே உயிரிழந்தான்.
காயமடைந்த ஐந்து போலீசாரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து மும்பை போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களும்உடனடியாக சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
சஞ்சய் மீது 12 கொலை வழக்குகளும் 20 மற்ற வழக்குகளும் உள்ளதாக சென்னை மாநகராட்சி போலீஸ் கமிஷனர்விஜயகுமார் நிருபர்களிடம் கூறினார். சம்பவம் நடந்த இடத்தையும் அவர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications