ரணிலுக்கு சந்திரிகா மீண்டும் அறிவுரை
கொழும்பு:
விடுதலைப்புலிகளிடம் எச்சரிக்கையாகவும் கடுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கைப் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா மீண்டும் அறிவுரை கூறியுள்ளார்.
நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சரான விதார் ஹெல்கெசனை நேற்று சந்தித்த பிறகுவெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் சந்திரிகா இவ்வாறு கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் தன்னுடைய பங்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து ரணிலுக்குசந்திரிகா விரைவில் எழுதுவார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையை தான் முழு மனதுடன் வரவேற்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கைஇனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவ்வறிக்கையில் சந்திரிகாகூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுக்கான நடவடிக்கைகள் குறித்து நார்வே தூதுக் குழுவினரிடம் சந்திரிகா பேசியதாகஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதே தவிர, அதுகுறித்து வேறு எந்த விவரமும் அதில் குறிப்பிடப்படவில்லை.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சிங்களர்களின் உண்மையான மனநிலை குறித்து அறிவதற்காகசந்திரிகாவின் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு இலங்கையில் புலிகள் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தால், அங்கிருக்கும் சிங்களமக்களின் நிலைமை என்னவாகுமோ என்று தான் அஞ்சுவதாக மக்கள் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரானரத்னசிரி விக்கிரமநாயகே கூறினார்.
புலிகளின் கோரிக்கைகளை எல்லாம் கண்மூடித்தனமாக ரணில் ஏற்றுக் கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியஅவர், அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசைவிட புலிகளே அதிகம் லாபமடைவார்கள் என்றும் விக்கிரமநாயகேதெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications