சைதாப்பேட்டை அதிகாரிகள் டிரான்ஸ்பர்: விசாரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
ஊட்டி:
சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுகுறித்து தமிழக தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கி விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல்கமிஷனரான லிங்டோ இன்று கூறினார்.
சைதாப்பேட்டை தொகுதியில் வரும் மே 31ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தத்தொகுதிக்குட்பட்ட சென்னை மாநராட்சி அதிகாரிகள் சிலரை சமீபத்தில் தமிழக அரசு இடமாற்றம் செய்தது.
பின் தேதியிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடமாற்ற உத்தரவு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றுதேர்தல் கமிஷனுக்குத் திமுக புகார்க் கடிதம் அனுப்பியது.
இந்நிலையில் ஊட்டியில் இன்று நிருபர்களிடம் லிங்டோ கூறியதாவது:
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தமிழகத் தேர்தல்கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாரங்கி விசாரணை நடத்துவார்.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்கவுள்ள மூன்று தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவாகத்தயாராகிக் கொண்டிருக்கிறது.
வரும் 22ம் தேதிக்குள் அந்தப் பணி முடிவடைந்தவுடன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த மூன்று தொகுதிகளிலுமே மின் வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாநிலங்களுமே நிதிப் பற்றாக்குறையால் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதால், அடிக்கடி தேர்தல்நடத்துவதை தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. அதற்காக அதிகம் செலவிடுவதையும் கமிஷன் விரும்பவில்லைஎன்றார் லிங்டோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications