புலிகள் விவகாரம்: திமுகவைச் சாடுகிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் தீர்மானத்தை திமுக எதிர்க்காமல் நடுநிலைவகித்த செயலை மன்னிக்கவே முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ இன்று கூறினார்.

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை சென்று பிடித்துக் கொண்டுவரவேண்டும் என்று கடந்த 16ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத்தீர்மானத்தை ஆதரிக்காமலும் எதிர்க்காமலும், இவ்விஷயத்தில் நடுநிலை வகிப்பதாக திமுக கூறிவிட்டது.

திமுகவின் இந்த நிலையை வைகோ வன்மையாகக் கண்டித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,

இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே திமுக உள்ளிட்ட பல திராவிடக் கட்சிகள் வளர்ந்தன.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் புலிகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தைக் கடுமையாகஎதிர்த்திருக்க வேண்டிய திமுக, அவ்வாறு செய்யாமல் நடுநிலை வகித்துள்ளது. இது மன்னிக்கவே முடியாதசெயலாகும்.

சைதாப்பேட்டை உள்ளிட்ட மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும். இந்தத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து வரும் 28ம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்தில்முடிவெடுக்கப்படும் என்றார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+