பா.ஜ.க. நிலையில் மாற்றம்: மீண்டும் திமுகவுடன் நெருக்கம்
திருநெல்வேலி:
தமிழகத்தில் திமுக-பா.ஜ.க. இடையே நல்லுறவு நிலவி வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சமீபகாலமாக திமுகவை முறைத்து வந்த பா.ஜ.க. தனது நிலையில் இருந்து இறங்கி வர ஆரம்பித்துள்ளது. மத்தியில்தெலுங்கு தேசம் அரசுக்கு பெரும் நெருக்கடி தந்து வரும் நிலையில் திமுக அமைதி காத்து வருகிறது.
குஜராத் முதல்வர் மோடியை மாற்றும் விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து தங்களுக்கு கருணாநிதியும்தொந்தரவு தருவார் என்று எதிர்பார்த்த பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்தத்தைத் தந்து வருகிறார் கருணாநிதி.மத்திய அரசை அவர் எந்த வகையிலும் சாடவில்லை.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வந்த பா.ஜ.க. அதைமறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது.
இதையடுத்துத் தான் குஜராத் முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்.
தான் எவ்வளவு இறங்கி வந்தாலும் தன்னை கண்டுகொள்ள மறுக்கும் பா.ஜ.க. தலைமையால் ஜெயலலிதாவும்எரிச்சலடைந்துள்ளார். இதனால் காங்கிரசுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் செயல்களில்ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்நிறைவேற்றியது கூட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மகிழ்விக்கத் தான் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா எவ்வளவோ முயற்சி செய்தும் கூட பிரதமர் வாஜ்பாய் அதிமுகவைக் கண்டுகொள்ளவில்லை என்றுதிமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.-திமுக இடையிலான உறவு சீரடைந்து வரும் அதே நேரத்தில் அதிமுக-காங்கிரஸ் உறவும் மேம்பட்டுவருகிறது.
இந் நிலையில் நெல்லையில் நடந்து வரும் பா.ஜ.க. மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தியும் திமுகவுடனான தனது கட்சியின் உறவுக்கு அழுத்தம் தந்துபேசியுள்ளார்.
இவர் சென்னையில் நடந்த தனது மகனின் திருமணத்துக்கு கருணாநிதியை அழைக்காமல் விட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கலந்து கொண்ட அந்தத் திருமணநிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் கருணாநிதி. தன்னை திருமண நிகழ்சிக்குஅழைக்காமல் அவமானப்படுத்தியதை கருணாநிதியே மிகவும் வருத்தப்பட்டு வெளியில் சொல்லியிருந்தார்.
இந் நிலையில் அதே ஜனா. கிருஷ்ணமூர்த்தி திமுகவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றுபேசியுள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர்,
நாங்கள் காங்கிரஸ் மாதிரி இல்லை. அவர்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு திராவிடக் கட்சியுடன்மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொள்வார்கள். பா.ஜ.க. இந்த விஷயத்தில் தனது தனித்துவத்தை இழக்காது.
எங்களுக்கு திமுகவுன் நல்லுறவு நிலவி வருகிறது.
இலங்கை விஷயத்தில் நார்வேயின் முயற்சியால் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதில்இந்தியா தலையிட்டால் பிரச்சனை வலுவடையலாம். அதனால் தான் தலையிடாமல் இருந்து வருகிறது என்றார்ஜனா.












Click it and Unblock the Notifications