சென்னை பென்டாசாப்ட் இன்ஜினியர் வீட்டில் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மீண்டும் ஒரு கொள்ளை நடந்துள்ளது. இம் முறை பென்டாசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும்சாப்ட்வேர் இன்ஜினியரின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளது.

சென்னை நகரில் வீடுகள், நகைக் கடைகள், நிறுவனங்களை உடைத்துக் கொள்ளையடிப்பது தொடர்ந்து வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் பெரிய கொள்ளைகள் நடந்துவிட்டன.

இந் நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சென்னை வேளச்சேரி பைபாஸ் சாலையில் மீணடும்கொள்ளை நடந்துள்ளது. இங்குள்ள சசிநகரில் வசிப்பவர் ராமநாதன். இவர் தரமணியில் உள்ள டைடல் பார்க்கில்அமைந்துள்ள பென்டாசாப்ட் நிறுவனத்தின் கிளையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார்.

இவர் பணி நிமித்தமான கடந்த ஒரு வாரத்துக்கு முன் வெளியூர் சென்றுவிட்டார். தனது மனைவியை அவரதுதாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

இதனால் வீடு கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டம் விட்ட கொள்ளையர்கள் இன்றுஅதிகாலையில் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

மெயின் கேட்டை உடைத்துக் கொண்டு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டையும் உடைத்துக் கொண்டுஉள்ளே நுழைந்தனர்.

வீட்டில் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தனர். வீட்டில் கொள்ளையர்கள்நெடு நேரம் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த எல்லா பொருள்களும் சிதறிக் கிடக்கின்றன. பெட்ரூமையும்கொள்ளையர்கள் சின்னாபின்னமாக்கியுள்ளனர்.

வீட்டிலிருந்த எல்லா பெட்டிகளையும் கொள்ளையர்கள் உடைத்து அதிலிருந்த பொருள்களை திருடியுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை.இந்தக் கொள்ளை விவரம் குறித்து இன்னும் அந்த வீட்டினருக்கே தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை.

சென்னையில் நடந்து வரும் இந்தத் தொடர் கொள்ளைகள் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வைஏற்படுத்தியுள்ளது.

இரவில் ரோந்து வரும் போலீசார் பரோட்டா கடைகளில் ஓசி பரோட்டா சாப்பிட்டுவிட்டு ஸ்டேசனுக்குத்திரும்பிவிடுவது தான் இந்தக் கொள்ளையர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

சென்னை கொள்ளையர்களைப் பிடிக்க பெரும் எண்ணிக்கையில் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றுசட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த சிறப்புப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுகொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து கொண்டுள்ளனர்.

இதனால், சென்னை மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+