ரணிலும் இந்தியா வருகை: வாஜ்பாய், ஜெவுடன் பேச்சு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா இந்தியா வருவதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இந்தியாவருகிறார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா நினைவுரையாற்ற நாளை அவர் இந்தியா வருவதாகக்கூறினாலும் இலங்கைப் பிரச்சனை, புலிகள் விவகாரம் தொடர்பாக பேசவே அவர் வருவதாகக் கருதப்படுகிறது.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்தித்துப்பேசவுள்ளார்.
புலிகள் விஷயத்தில் தொடர்ந்து கடுமையாக நடந்து கொள்ளுமாறு அவர் இந்தியத் தலைவர்களிடம் கோருவார்என்று தெரிகிறது. புலிகள் விஷயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் நடவடிக்கைகளை சந்திரிகாமுழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால், ரணிலை தட்டி வைக்க அவர் இந்திய ஆதரவைக் கோருவார்.
இந் நிலையில் இனப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்று கோரிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் டெல்லி வர முடிவு செய்துள்ளார்.
அவரும் பிரதமர் வாஜ்பாயுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஜூன் முதல்வாரத்தில் இந்தியா வரத்திட்டமிட்டுள்ள ரணில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
இதற்காக அவர் சென்னை வரவும் முடிவு செய்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றவுடன் ரணில் இந்தியா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவதுமுறையாக அவர் வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications