தமிழகத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் மிக அதிகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து கர்நாடக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் கூடுதல் இயக்குநர் டாக்டர். திம்மய்யா பெங்களூரில் எய்ட்ஸ் குறித்த தேசியகருத்தரங்கில் கூறியதாவது:-

உலகில் 4 கோடி எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டும் 48 லட்சம் பேர் உள்ளனர். ஆந்திரம், கர்நாடகம்,மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற தென் மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகம்.

தமிழகத்தில் மட்டும் 15,055 எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கைஅதிக அளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் 27 லட்சம் சிறார்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் 15 வயதிற்குட்பட்டவர்கள். மீதமுள்ள 3.72கோடி பேரும் வயது வந்தவர்கள்.

டிசம்பர் 2001ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் இவை.

கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5.8 லட்சம் பேர் 15வயதிற்குட்பட்ட சிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+