கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாடிய "ஆர்க்காடு"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரும், அக்கட்சியின் பொருளாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படுபவருமான ஆர்க்காடுவீராசாமி தனது 66-வது பிறந்த நாளை தனது சொந்த கிராமத்தில் எளிமையாகக் கொண்டாடினார்.

கருணாநிதியின் நிழல் என்று வர்ணிக்கப்படுபவர்கள் முரசொலி மாறனும், ஆர்க்காடு வீராசாமியும். கருணாநிதி பதவியில் இருக்கும்போதெல்லாம் அவருடன்ஒட்டியே காணப்படுவார் ஆர்க்காடு வீராசாமி.

ஆர்க்காட்டார் என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்படும் ஆர்க்காடு வீராசாமி, திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எல்லா விஷயங்களிலும்தலை காட்டுவார்.

ஆனால், ஆட்சி போய் பதவி போனதில் இருந்து ரொம்பவே சைலண்ட் ஆகிவிட்டார். இவரது சகோதரருக்கு ஏகப்பட்ட காண்ட்ாக்ட் பிசினஸ் உண்டு. இந்தவிவகாரத்தை அதிமுக கிளரலாம் என்பதால் அக் கட்சிக்கு எதிராக இவர் ஏதும் பேசுவதே இல்லை. மிகவும் அமைதியாகிவிட்டார்.

இடையில் உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் சில நாட்கள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தனது 66-வது பிறந்தநாளை தனது சொந்த ஊரான ஆர்க்காடுக்கு பக்கத்தில் உள்ள கிராமத்தில் வைத்து எளிமையாகக் கொண்டாடினார்.

திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தந்திகளை அனுப்பி ஆர்க்காட்டாரை வாழ்த்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+