வர்றியா... ஒத்தைக்கு ஒத்தை வர்றியா: சட்டசபையில் அதிமுக- திமுக மோதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவரை நேரடியாக பெயரைச் சொல்லி குறிப்பிட்ட அமைச்சரால் சட்டசபையில் பெரும் அமளிஏற்பட்டது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பான விவாதம் நடந்தபோது விவசாயத்துறை அமைச்சர்ஜீவானந்தம் இடைமறித்துப் பேசினார். அவர் கூறுகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இத் திட்டத்தை சிறியவிவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனால், இதை கருணாநிதி எல்லா விவசாயிகளுக்கும் வழங்கினார். இதனால் பலனடைந்தது பணக்காரவிவசாயிகள் மட்டும் தான் என்றார்.

திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் முதல்வர் என்றோ, பேரவை உறுப்பினர் என்றோ கூட அமைச்சர்குறிப்பிடவில்லை. வெறுமனே கருணாநிதி என்றார்.

இதனால் எரிச்சலடைந்த திமுக உறுப்பினர்கள் எப்படி இவ்வளவு மூத்த தலைவரை பெயரைச் சொல்லிக்குறிப்பிடலாம் என்றனர். இதையடுத்து அதிமுகவினர் திருப்பிக் கத்தினர்.

திமுகவினரும் பதிலுக்கு சவுண்ட் தர சட்டசபை அமளிதுமளிபட்டது. சில ஆளும் கட்சி உறுப்பினர்கள்திமுகவினரைப் பார்த்து வர்றியா... ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்றெல்லாம் சைகை காட்டிக் கொண்டு கத்தினர்.

அப்போது திமுகவினர் விரல்களைக் காட்டி பேச, விரலை நீட்டி மிரட்டும் தொனியில் பேசுவதை தவிர்க்குமாறுஅவர்களை சபாநாயகர் காளிமுத்து எச்சரித்தார்.

தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்தகூச்சல்-குழப்பம் 10 நிமிடங்கள் நீடித்தது. அவை முடிய இருந்த நிலையில் ஏற்பட்ட இக் குழப்பத்தால் பரபரப்புஏற்பட்டது.

நிலைமை கட்டுமீறிப் போவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா எழுந்து தனது எம்.எல்.ஏக்களை அமருமாறுசைகை காட்டினார். அவர்கள் உடனே அமைதியாகி இருக்கைகளில் அமர்ந்தனர். இதன் பின்னர் தான் அவையில்அமைதி திரும்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+