சந்திரிகா இன்று இந்தியா வருகை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இன்று இந்தியா வருகிறார்.
ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இலங்கை பிரச்சனை, அமைதிப் பேச்சுவார்த்தைகள், புலிகள் விவகாரம் ஆகியவை குறித்து அவர் இந்தியத்தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
புலிகள் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ளுமாறு அவர் இந்தியாவை வற்புறுத்துவார் என்று கூறப்படுகிறது.
சந்திரிகாவின் வருகையைத் தொடர்ந்து வரும் ஜூன் முதல் வாரத்தில் இந்தியா வர இந் நாட்டுப் பிரதமர் ரணில்விக்கிரமசிஙகேயும் முடிவு செய்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு இந்தியாவை ரணில்வற்புறுத்துவார்.












Click it and Unblock the Notifications