சூடுபிடிக்கிறது இடைத் தேர்தல் களம் .. "ஆக்ஷனில்" இறங்கினார் இளங்கோவன்
சென்னை:
தமிழக இடைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் தலைமையில் சில கட்சிகளை அணி சேர்க்க அக் கட்சியின்தலைவர் இளங்கோவன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
தமிழக சட்டசபையின் 3 தொகுதிகளுக்கு மே 31ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுபாக்கம் ஆகிய 3 தொகுதிகளில் நடக்கும் இந்தத் தேர்தலில் அதிமுக தனியே போட்டியிடும் என்றுதெரிகிறது.
சைதாப்பேட்டையில் திமுக உறுதியாக போட்டியிடுகிறது. அச்சிறுபாக்கத்தை பா.ம.க.வுக்கு விட்டுக் கொடுக்கவுள்ளது. வாணியம்பாடியில்போட்டியிடுவது குறித்து குழப்பமான நிலையில் உள்ளது. அங்கு முஸ்லீம் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கு அத் தொகுதியைவிட்டுக் கொடுக்கும் முடிவை திமுக எடுக்கலாம்.
காங்கிரஸைப் பொறுத்தவரை புது உற்சாகத்துடன் உள்ளது. சில கட்சிகளை தங்களது அணியில் சேர்த்துக் கொண்டு இடைத் தேர்தலைசந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைசந்திக்கும் பணியில் இறங்கியுள்ளார் கட்சித் தலைவர் இளங்கோவன்.
இது தவிர ப.சிதம்பரம், திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
இவர்கள் அனைவரையும் சேர்த்துக் கொண்டு இடைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் அணி, திமுகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைக்கலாம் என்ற வதந்தி சில நாட்களாக செய்தியாளர்கள் மத்தியில் உலவிவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,
கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் இடைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். அனைத்து கூட்டணிக்கட்சித் தலைவர்களுடனும் பேசுவேன். பேச்சுவார்த்தை முழுவதுமாக முடிந்த பிறகே திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்பது பற்றித்தெரிவிக்க முடியும் என்றார்.
இருப்பினும், திமுக விஷயத்தில் பாரதீய ஜனதாக் கட்சி இறங்கி வர ஆரம்பித்துள்ளதால் தற்போதைக்கு காங்கிரசுடன் அக் கட்சி கூட்டணிவைத்துக் கொள்ளாது என்று கருதப்படுகிறது.
தற்போதைய நிலையில் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிதான் இடைத் தேர்தலை சந்திக்க அதிக ஆர்வத்துடன் உள்ளது.












Click it and Unblock the Notifications