போலி டாக்டரின் கல்யாண வைபோகமே !
சேலம்:
ஊருக்கு ஒரு கல்யாணம் செய்து கலக்கிக் கொண்டிருந்த போலி டாக்டரை சேலம் போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தச்ை சேர்ந்தவர் மோஸஸ் ஆல்பர்ட். இவருக்கு ஹோமியோபதி மருத்துவம் ஓரளவுக்குப்பார்க்கத் தெரியும். இதை வைத்துக் கொண்டு திருநெல்வேலியில் தன்னுடைய "டாக்டர் தொழிலை"த்தொடங்கினார்.
அதில் நல்ல காசு வரவே தனது பெயருக்குப் பின் எம்.பி.பி.எஸ். என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டு சேலம்மாவட்டம் ஆத்தூருக்கு வந்தார்.
ஆத்தூர் அருகே வீராணத்தில் தனது கிளினிக்கை ஆரம்பித்த மோஸஸ், சிறிது நாட்களுக்குப் பிறகு டெல்லியைச்சேர்ந்த மேரி பால்வின் என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். அதன் பிறகு மேரி பால்வின் டெல்லியிலிருந்துவந்து ஆத்தூரிலேயே தங்கி விட்டார்.
மேரி பால்வினைத் திருமணம் செய்து கொண்ட பிறகு நெல்லையைச் சேர்ந்த என்ஜினியர் சுசீலா என்பவரைத்திருமணம் செய்து கொண்டார் ஆல்பர்ட். வார இறுதியில் திருநெல்வேலியிலும் மற்ற நாட்களில் ஆத்தூரிலும் தங்கிநாட்களை ஓட்டி வந்தார் மோஸஸ்.
இந்நிலையில், இரண்டாவது மனைவியான சுசீலா திடீரென்று வீராணத்தில் உள்ள மோஸஸின் மருத்துவமனைக்குவந்தார். அதே நேரத்தில் மேரி பால்வினும் அங்கு வரவே, மோஸஸின் குட்டு வெளிப்பட்டது.
இதையடுத்து வீராணம் போலீஸில் சுசீலா புகார் கொடுத்தார்.
அவரது புகாரையேற்ற போலீஸார் ஆல்பர்ட்டை விசாரித்தபோது, அவருக்கும் மேரிக்கும் நடந்த திருமணம்,போலி டாக்டராக செயல்பட்டது ஆகிய அனைத்தும் படிப்படியாகத் தெரிய வந்தன.
இதையெல்லாம் அறிந்த மோசஸ் தலைமறைவானார். வெளியூருக்குத் தப்பிச் செல்வதற்காகபொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே நின்று கொண்டிருந்த மோஸஸைப் போலீசார் வளைத்துப் பிடித்துக்கைது செய்தனர்.
மேலும் மைசூரைச் சேர்ந்த பிரபல பெண் டாக்டர் உள்பட பல படித்த பெண்களையும் மோஸஸ் திருமணம்செய்துள்ளதும் தெரிய வந்தது. மருத்துவமனையில் உள்ள நர்சுகளிடம் தன்னுடைய காம லீலைகளை மோஸஸ்காட்டியிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.












Click it and Unblock the Notifications