நாளை இரவு அலிகள் திருவிழா

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

ஆண்டுதோறும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடக்கும் அலிகள் திருவிழா நாளை நடக்கவுள்ளது.

நாளை இரவில் நடக்கும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான அலிகள் கூத்தாண்டவர் சாமி சார்பில் தங்கள் கழுத்தில்தாலி கட்டிக் கொள்வர். நாளை மறுதினம் நடக்கும் தேர் திருவிழாவின்போது தாலியை அறுத்துவிட்டு ஒப்பாரிபாடுவர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்தவண்ணம் உள்ளது.

மும்பை, பெங்களூர், கொல்கத்தா என நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கக்காண அலிகள் ஏற்கனவேகூவாகத்தில் கூட ஆரம்பித்துவிட்டனர். முன்பெர்லாம் மிகச் சாதாரணமாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி இப்போதுமிகப் பிரபலம் அடைந்துவிட்டது.

ஆண்டுதோறும் அழகிய அலியைத் தேர்ந்தெடுக்க மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தஆண்டும் இந்தப் போட்டி நடக்கவுள்ளது.

உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள இந்த கூவாகம கிராமத்தில் அமைந்துள்ள இக் கோவிலுக்கு நூறுஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த கூத்தாண்டவர் கோவில் விழா நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியைப் பார்க்க பக்தர்களும் பெரும் எண்ணிக்கையில் கூட ஆரம்பித்துள்ளனர். இதனால் விழுப்புரம்,உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள ஊர்களில் லாட்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.

அலிகளில் பெரும்பான்மையனவர்கள் தவறுதலான உடலுறவின் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதில் பெரும் பங்குவகித்து வருகின்றனர். எனவே, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல தொண்டு நிறுவனங்களும் கூவாகத்தில்குவிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+