குஜராத்தில் மேலும் 24 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத்தில் நேற்று முதல் நடந்த புதிய வன்முறைகளில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர்காயமடைந்தனர்.

அகமதாபாத்தின் பாபு நகர் பகுதியில் சிறுபான்மையினரின் வீடுகளுக்கு ஒரு கும்பல் நேற்று தீ வைத்தது.இதையடுத்து கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 4 பேர் எரித்துக்கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சாவுகள் நேற்றிரவும் இன்று காலையும்நடந்தன.

இன்று பிற்பகலில் அகமதாபாத்தில் நடந்த வன்முறையில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இருதினங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆகியுள்ளது.

குஜராத்தில் ராணுவம் நிறுத்தப்பட்டிருந்தாலும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த ராணுவப் படைகளை அரசுபயன்படுத்தாமல் இருந்து வருகிறது. வன்முறையை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டால் தான்ராணுவத்தையே அரசு அழைக்கிறது.

இதனால் தான் தொடர்ந்து பெரும் அளவில் உயிர்ச் சேதங்கள் நடந்து வருகின்றன.

இவ்வளவு வன்முறை நடந்த பின்னரும் அம் மாநில முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக மறுத்து வருகிறார்.அவரைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றமே இயங்காமல் போனாலும் அதைப் பற்றி கவலையே இல்லாமல்இருக்கிறது பா.ஜ.க. அரசு.

பெர்னாண்டஸ் தலைமையில்....

இந் நிலையில் கடந்த 2 நாட்களாக குஜராத்தில் முகாமிட்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்அனைத்து மதப் பிரமுகர்களைக் கொண்ட அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். வரும் 28ம் தேதி இந்தப்பேரணி நடக்கிறது.

இந்தப் பேரணியில் பங்கேற்க வருமாறு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, திரிணமூல் காங்கிரஸ் தலைவிமம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரி வரும் இந்த இருவரையும் பேரணிக்கு அழைப்பது அவர்களைமேலும் கடுப்படையச் செய்யும் என்பது நிச்சயம்.

நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு:

குஜராத் விவகாரம் தொடர்பாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிவருவதை அரசு ஏற்க மறுத்து வருவதால் 6வது நாளாக தொடர்ந்து இன்றும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் இந்தப் பிரச்சனையைக் கிளப்பிய எதிர்க் கட்சிகள் அவையை நடத்தவிடவில்லை. பா.ஜ.கவினரும் எதிர்க் கட்சி எம்.பிக்களும் ஒருவருக்கு ஒருவர் எதிராக கோஷம் எழுப்பியதால்பெரும் அமளி நிலவியது.

இந்த விவகாரத்தில் ஒட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த அனுமதிப்பது குறித்து துணை சபாநாயகர் பி.எம். சயீத்நாளை முடிவு செய்கிறார். முதலில் இன்று தனது முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். இதற்காக அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் மீண்டும் அவர் பேச்சு நடத்தினார்.

ஆனால், ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தங்கள் பிடியில் இருந்து இறங்கி வராததால் எந்த முடிவும்எட்டப்படவில்லை. இதையடுத்து ஓட்டெடுப்பு உண்டா இல்லையா என்பது குறித்து எனது அதிகாரத்தைப்பயன்படுத்தி நாளை அறிவிப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+