ஜெயலலிதாவின் கெட்ட எண்ணம்: கருணாநிதி வர்ணனை
சென்னை:
ஸ்டாலினின் பதவியைப் பறிக்க சட்டம் கொண்டு வந்ததன் மூலம் ஜெயலலிதாவின் கெட்ட எண்ணம்வெளிப்பட்டுவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இது தொடர்பாக இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள்கருத்து கேட்டபோது அவர் பதிலளிக்கையில்,
ஒருவருக்கு ஒரு பதவி என்பதை நாங்கள் நிச்சயம் வரவேற்கிறோம். இதில் எந்த கருத்து முரண்பாடும் இல்லை.ஆனால், இந்தச் சட்டத்தை முன் தேதியிட்டு அமலாக்குவது என்ற முடிவு தான் பிரச்சனையே.
ஸ்டாலினின் பதவியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகத் தான் முன் தேதியிட்டு அமலாக்குகிறார்கள். இதன் மூலம்ஜெயலலிதாவின் உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் வழக்கமான கெட்ட எண்ணம்வெளிப்பட்டுவிட்டது என்றார் கருணாநிதி.
இச் சட்டம் அமலுக்கு வந்தால் ஸ்டாலின் எந்தப் பதவியை ராஜினாமா செய்வார் என்று கேட்டபோது, முதலில்சட்டம் வரட்டும். இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது சட்ட மசோதா தான். இது முதலில் சட்டமாகட்டும். அப்புறம்பார்ப்போம் என்றார்.
ஸ்டாலின் கண்டனம்:
இது குறித்து சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்திருக்கிறார். முழுக்க முழுக்கஉள்நோக்கத்துடன், பழி வாங்கல் நோக்கத்துடன், என் பதவியைப் பறிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகக்கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இது என்றார்.












Click it and Unblock the Notifications