இந்தியா வந்தார் சந்திரிகா
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இன்று இந்தியா வந்து சேர்ந்தார். தனி விமானத்தில் டெல்லி வந்தஅவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்திரிகாவுடன் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமன் கதிர்காமரும் இந்தியா வந்துள்ளார்.
நாளை மறைந்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா குறித்த நினைவுரையாற்ற ஆற்றும் சந்திரிகா ஒரு வாரம்இந்தியாவில் தங்கியிருப்பார்.
நாளை மறுதினம் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இலங்கை பிரச்சனை, அமைதிப் பேச்சுவார்த்தைகள், புலிகள் விவகாரம் ஆகியவை குறித்து அவர் இந்தியத்தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
மேலும் மேற்காசியாவில் நடந்து வரும் இஸ்ரேஸ்-பாலஸ்தீன மோதல், இந்திய-இலங்கை உறவு, சர்வதேசஅரசியல் நிலவரம் குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனும் அவர் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
புலிகள் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ளுமாறு அவர் இந்தியாவை வற்புறுத்துவார் என்று கூறப்படுகிறது.
சந்திரிகாவின் வருகையைத் தொடர்ந்து வரும் ஜூன் முதல் வாரத்தில் இந்தியா வர இந் நாட்டுப் பிரதமர் ரணில்விக்கிரமசிஙகேயும் முடிவு செய்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்குமாறு இந்தியாவை ரணில்வற்புறுத்துவார்.












Click it and Unblock the Notifications